கடையை மூடச் சொன்ன காங்கிரஸ் கட்சியினரை அரிவாளைக் காட்டி மிரட்டிய கடை உரிமையாளர்...
பதிவு: செப்டம்பர் 10, 2018, 01:20 PM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடையை மூட வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியினரை அந்தக் கடையின் உரிமையாளர் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடைக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதப்படுத்தினர்.