எருக்கம் கட்டையில் உருவாக்கப்படும் விநாயகர் சிலை...
பதிவு: செப்டம்பர் 09, 2018, 12:43 PM
வேலூர் தொரப்பாடி சாலையில் விற்பனை செய்யப்படும் எருக்கம் கட்டையிலான விநாயகர் சிலைகளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். ஆரணியை சேர்ந்த ஏழுமலை , கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எருக்கம் கட்டையில் செய்த விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். ஒரு சிலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், விநாயகர் சதூர்த்தி நெருங்கி வருவதால் ஏராளமான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் ஏழுமலை கூறியுள்ளார்.