சேலம் பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் : விண்ணப்பித்த மறுநாளே அனுமதி
பதிவு: செப்டம்பர் 08, 2018, 06:18 PM
சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அம்மா பேட்டை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இன்று பணிகளை பார்வையிட்ட சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், பாதாள சாக்கடை இணைப்பிற்கான கட்டணத்தை பொதுமக்கள் 10 தவணைகளாக கட்டலாம் எனறார்.  பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்தை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், மறு நாளே அனுமதி வழங்கப்படும் எனவும் சதீஷ் தெரிவித்தார்.