பெண்கள் சக்தி விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
பதிவு: செப்டம்பர் 08, 2018, 03:48 PM
2018-ஆம் ஆண்டு பெண்கள் சக்தி விருதுக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பாடுபடும் பெண்களுக்கும், அந்த பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.