"ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்" - திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு
பதிவு: செப்டம்பர் 08, 2018, 12:24 PM
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி வழியாக இயக்கப்படும் பல்வேறு விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல்,  திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இன்றும் வரும் 15,22,29 ஆகிய தேதிகளில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.