செப்.9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
பதிவு: செப்டம்பர் 08, 2018, 07:37 AM
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்,நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.  இந்த கூட்டத்தில்,  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.