ரஜினி நடிக்கும் புதிய படம் 'பேட்ட' : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பதிவு: செப்டம்பர் 07, 2018, 06:23 PM
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தின் பெயர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் படத்திற்கு "பேட்ட" என பெயர் சூட்டி, மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

" பேட்ட " : ரஜினியின் 165 - வது படம் 

ரஜினியின் "பேட்ட" என்ற இந்த புதிய படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் "பேட்ட" என்ற ரஜினியின் 165 - வது  திரைப்படம், அடுத்தாண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.