மெட்ரோ ரயில் சேவை: நேர மாற்றம் இன்று முதல் அமல்
பதிவு: செப்டம்பர் 07, 2018, 03:36 PM
சென்னை டிஎம்எஸ் - விமான நிலையம் இடையிலான வழித்தடத்தில் பரபரப்பான நேரத்தில், 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவையும், பரபரப்பு குறைந்த நேரத்தில் 14 நிமிடத்துககு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே 14 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவையும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 14 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவை என நேரம் மாற்றம் செய்யப்பட்டு  உள்ளது. அதேபோல சென்னை சென்ட்ரல் - ஆலந்தூர் இடையே 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். நேரம் மாற்றம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.