கட்டாய ஹெல்மெட் விழிப்புணர்வு - நீதிபதிகள் கேள்வி
பதிவு: செப்டம்பர் 06, 2018, 04:59 AM
* சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற மோட்டார் சட்ட விதிகளை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

* இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக கூடுதல் ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு 2016-ம் ஆண்டு 20 கோடி ரூபாயும், 2017-ம் ஆண்டு 42 கோடி ரூபாயும், 2018 ஜுலை வரை 15 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சிக்னல்களில் நோட்டீஸ் வழங்குவது மட்டும் விழிப்புணர்வு ஆகிவிடுமா?  என்றும், முறையான விழிப்புணர்வை வழங்கி இருந்தால் வழக்குகள் குறைந்திருக்காதா? எனவும் சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

* ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ள தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து  டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.