சிம்புவுடன் ஜோடி சேரும் மேகா ஆகாஷ் ?
பதிவு: செப்டம்பர் 05, 2018, 08:53 PM
சிம்பு நடித்துள்ள 'செக்க சிவந்த வானம்' இம்மாதம் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து , சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படம், தெலுங்கில் பவன் கல்யாண் - சமந்தா நடித்து மெகா ஹிட்டான 'அத்தாரிண்டிகி தாரேதி' என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் சமந்தா நடித்த கதாப்பாத்திரத்தை தமிழில் மேகா ஆகாஷ் ஏற்று நடிக்க உள்ளார் என்றும் , அதற்கான பேச்சுவார்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.