சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகின்றனர் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
பதிவு: செப்டம்பர் 04, 2018, 10:35 AM
பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண்ணுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் பேசுவது, பண்பாடற்ற செயல் என அக்கட்சியின் எம்.பி. இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விரோதமான செயலை அரசியல் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.