ஓவிய ஆசிரியர் பணி நியமன வழக்கு : 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பதிவு: செப்டம்பர் 02, 2018, 01:45 PM
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான 576 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு நடத்தியது. இதில் தகுதியில்லாதவர்களை நியமிக்க தடை விதிக்க கோரியிருந்தனர். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆகியோருக்கு நீதிபதி சத்ருகனா புஜாரி உத்தரவிட்டார். இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.