"மருத்துவ சிகிச்சையில் தமிழகம் முதலிடம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
பதிவு: ஆகஸ்ட் 30, 2018, 01:15 PM
சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரசவ காலங்களில் குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளும் நவீனமயமாக்கப்பட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.