தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
பதிவு: ஆகஸ்ட் 30, 2018, 11:56 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். சென்னை தியாகராயநகரில் உள்ள நல்லகண்ணு வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தி.மு.க. தலைவராக  பொறுப்பேற்ற ஸ்டாலின், பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இன்று நல்லகண்ணுவை ஸ்டாலினும், துரைமுருகனும் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.