பர்மிங்காம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து 180 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
பதிவு: ஆகஸ்ட் 04, 2018, 08:32 AM

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற போராடி வருகிறது. பர்மிங்காம் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களுடன் 3வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பே அதிர்ச்சியாக அமைந்தது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 84 ரன்கள் தேவைப்படும் நிலையில், 43 ரன்களுடன் கோலியும், 18 ரன்களுடன் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர்.