பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை மரத்தடியில் விட்டு சென்ற அவலம்
பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையோர மரத்தடியில் விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.;
பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையோர மரத்தடியில் விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெங்களூருவின் தேவனஹள்ளி பகுதியில் உள்ள சாலையோர மரத்தடியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதால், அப்பகுதியினர் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது, துணியில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த பெண் குழந்தையை பார்த்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். மீட்கப்பட்ட குழந்தைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.