"கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம்" - விவசாய சங்க கூட்டத்தில் முடிவு

திட்டமிட்டபடி பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகளின் போராட்டம் மற்றும் பேரணி நடைபெறும் என கிராந்திய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-21 03:36 GMT
திட்டமிட்டபடி பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகளின் போராட்டம் மற்றும் பேரணி நடைபெறும் என கிராந்திய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.


மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இந்தநிலையில் போராட்டங்களை நீடிப்பது குறித்து டெல்லி எல்லைகளில் போராடக்கூடிய  விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வருகிற 22 ஆம் தேதி லக்னோ பேரணியும், 26 ஆம் தேதி விவசாயிகளின் ஓராண்டு  நிறைவு போராட்டம் மற்றும் பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும்  குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக்கு அரசு இதுவரை உரிய பதில் வழங்கவில்லையென தெரிவித்த விவசாய சங்கத்தினர், தங்களோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். எனவே தங்களின் முழுமையான கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்