புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி
புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.;
புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கன்னட ரசிகர்களால் அப்பு என்றழைக்கப்படும் நடிகர் புனித்தின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்ட புனித் ராஜ்குமாரின் உடலுக்கு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து தங்களது அஞ்சலியை செலுத்தினர். இதையடுத்து, கன்டீரவா ஸ்டூடியோவில் வைத்து நடைபெற்ற புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் திரண்ட ரசிகர்கள், ஸ்டூடியோவை சுற்றியுள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் மீதும், மரங்களின் மீதும் ஏறி நின்று தங்களது விருப்பமான நடிகர் புனித் ராஜ்குமாரை இறுதியாக வழியனுப்பி வைத்தனர்.