புனித்தை முத்தமிட்டு வழியனுப்பிய முதல்வர் - அரசு மரியாதையுடன் புனித் உடல் நல்லடக்கம்

புனித் ராஜ்குமாருடனான தனது உறவு குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உணர்ச்சி பொங்க பேட்டியளித்துள்ளார்.;

Update: 2021-10-31 07:17 GMT
புனித் ராஜ்குமாருடனான தனது உறவு குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உணர்ச்சி பொங்க பேட்டியளித்துள்ளார். 46 வயதான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் கடந்த வெள்ளியன்று உயிரிழந்தார். இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிறுவனாக இருந்தது முதல் புனித் ராஜ்குமாரை தனக்கு தெரியும் என்றும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்துடன் தனக்கு நெருங்கிய உறவு உண்டு என்பதால் தனிப்பட்ட முறையில் இது தனக்கு பெரும் இழப்பு என குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டார். முன்னதாக இறப்பதற்கு முந்தைய நாள் தன்னிடம் கர்நாடகா சுற்றுலா தொடர்பான இணையதளத்தை வெளியிடும்படி புனித் கேட்டு கொண்டதை முதல்வர் பசவராஜ் நினைவு கூர்ந்திருந்தார். இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கின் போது, முதல்வர் பசவராஜ் பொம்மை புனித்தின்  நெற்றில் முத்தமிட்டு, அவரை வழியனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்