கரிப்பூர் விமான நிலைய விபத்து சம்பவம் - மீண்டும் பெரிய விமான சேவைகள் இயக்கம்?

கரிப்பூர் விமான நிலைய விபத்திற்கு பிறகு பெரிய விமானங்களின் சேவையை மீண்டும் இயக்குவது குறித்து ஆராய தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-09-22 06:05 GMT
கரிப்பூர் விமான நிலைய விபத்திற்கு பிறகு பெரிய விமானங்களின் சேவையை  மீண்டும் இயக்குவது குறித்து ஆராய தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு   துபாயிலிருந்து வந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் விமான விபத்துக்கு, விமானி வழிகாட்டு நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லையென அறிக்கை வெளியானது. இதனை தொடர்ந்து பெரிய விமானங்கள் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து  விமான நிலையத்தில் பெரிய விமான சேவைகளை மீண்டும் தொடங்கலாமா என்பது குறித்து ஆராய ஒன்பது  பேர்  கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பெரிய விமானங்கள் இயக்குவது குறித்து ஆராய்ந்து இரண்டு மாதங்களில்  மத்திய  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அதன்பின்  பெரிய விமானங்கள் தரை இறங்க  அனுமதி  அளிப்பது குறித்து  பரிசீலிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்