தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்

கர்நாடக கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்ட பல்கலைக்கழக விழாவில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை கர்நாடக போலீசார் குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர்.;

Update: 2021-08-30 13:41 GMT
கர்நாடக மாநிலம், மங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா பங்கேற்றிருந்தார். அப்போது  கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சருக்கு எதிராகவும் முழக்கங்களையும் எழுப்பினர். இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டுகட்டாக கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்
Tags:    

மேலும் செய்திகள்