செம்மரக்கட்டை கடத்தல் - 2 பேர் கைது
திருப்பதியில் இயங்கிவரும் செம்மரக் கட்டை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று இரவு நாகலாபுரம் அருகே வனப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர்.;
திருப்பதியில் இயங்கிவரும் செம்மரக் கட்டை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று இரவு நாகலாபுரம் அருகே வனப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி சுமந்து சென்ற கும்பலை பிடிக்க முயன்றபோது போலையா என்பவர் மட்டும் சிக்கினார். அவரிடம் இருந்து 16 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் களத்தூர் வனப்பகுதியில் வெங்கட்டய்யா என்பவர் பிடிபட்டார். அங்கு 26 செம்மர கட்டைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 50 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.