பிரதமரை சந்தித்த பீகார் அனைத்து கட்சி குழு: "தமிழக முதலமைச்சரும் வலியுறுத்த வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான அனைத்து கட்சிக்குழு பிரதமரை வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்ன?;

Update: 2021-08-25 03:01 GMT
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பாண்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்,
பட்டியலின, பழங்குடியினர் பிரிவினரைத் தவிர இதர பிரிவினரை உள்ளடக்கிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான அனைத்து கட்சி குழு வலியுறுத்தி இருப்பது, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்