கேரளாவில் 18607 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 93 பேர் உயிரிழப்பு

கேரளாவில் 18 ஆயிரத்து 607 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.;

Update: 2021-08-08 20:12 GMT
கேரளாவில் 18 ஆயிரத்து 607 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

 கொரோனா பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இன்று   ஒருநாளில் மட்டும் 18 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35லட்சத்து 52ஆயிரத்து525 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில்  93 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்து உள்ளதாகவும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது வரை 17ஆயிரத்து747 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளான 1லட்சத்து 76ஆயிரத்து 572 பேர் கேரளா முழுவதும் மருத்துவமனைகளில்  சிகிச்சையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்