விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்; ககன்யான் திட்ட என்ஜின் பரிசோதனை வெற்றி - இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தகவல்

நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தேவையான விகாஸ் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2021-07-15 08:49 GMT
நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தேவையான விகாஸ் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்குள், அதாவது 2022-ம் ஆண்டுக்குள், விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் இத்திட்டத்திற்கு   'ககன்யான்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

விண்வெளிக்கு  மனிதனை அனுப்பும் இத்திட்டத்திற்கு இஸ்ரோ தேர்வு செய்த 4 வீரர்கள் தற்போது  ரஷியாவில் பயிற்சியில் உள்ளனர். 

 கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ ஆர்வத்துடன் முன்எடுத்து வருகிறது.

ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக 2 கட்ட சோதனைகளை செய்யவிருக்கும் இஸ்ரோ,

முதற்கட்ட சோதனையாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை அனுப்பி சோதனையை நடத்துகிறது.  


முன்னதாக திட்டத்திற்கு மிக முக்கியமான திரவ எரிபொருள் விகாஸ் என்ஜின் பரிசோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

பரிசோதனைக்கு 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கவுண்ட்டவுன் தொடங்கியது. இறுதியில் திட்டமிட்டப்படி 240 வினாடிகளில் இலக்கை அடைந்து விகாஸ் என்ஜின் பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விகாஸ் என்ஜின் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோவுக்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்