உ.பி. மக்கள்தொகை கட்டுப்பாடு மசோதா - 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது

உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வரைவு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.;

Update: 2021-07-11 12:10 GMT
உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வரைவு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மசோதாவில் கூறப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்ன? என்பதை பார்க்கலாம்...

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேசத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஆளும் பாஜக அரசு, மக்கள்தொகை கட்டுப்பாடு மசோதா-2021 என்ற வரைவு மசோதாவை தயாரித்து உள்ளது.

அந்த வரைவு மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

அரசு பணியில் பதவி உயர்வு பெற முடியாது, எந்தவகையான அரசு மானியமும் பெற முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்கள் மொத்த பணிக்காலத்தில் கூடுதலாக 2 ஊதிய உயர்வு பெறலாம். 

பெண் ஊழியராக இருந்தால், முழு ஊதியம் மற்றும் படிகளுடன் 12 மாதங்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசின் வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்படும் பேறுகால மையங்கள் மூலமாக கர்ப்பத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் ஆகியவை வழங்கப்படும். 

இந்நடவடிக்கை இஸ்லாமிய சமுதாயத்தினர் மீதான தாக்குதலாக அமையும் என சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ. இக்பால் முகமது விமர்சனம் செய்திருக்கிறார்
Tags:    

மேலும் செய்திகள்