வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி - ஆற்றைக் கடந்து செல்லும் சுகாதார ஊழியர்கள்
ஜம்மு காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.;
ஜம்மு காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக சுகாதார ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் அதைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில், வீடு வீடாக சென்று மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொருட்டு சுகாதார ஊழியர்கள், ஆபத்து மிகுந்த ஆற்றைக் கடந்து செல்லும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.