கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ் - தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு...;
கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறது இந்தத் தொகுப்பு...
நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்றின் தீவிரம் இன்னமும் குறையவில்லை.
கேரளாவில் வியாழக்கிழமை ஒரே நாளில்13 ஆயிரத்து 772 பேரும்,
மகாராஷ்டிராவில் 9,558 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்றின் வேகம் குறையாதது குறித்து, பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு, கொசுக்கள் மூலம் பரவும் ஸிகா
ZIKA வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், தலைவலி ஆகிய அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு சேர்ந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 19 பேரின் மாதிரிகளை, புனேவுக்கு அனுப்பி சோதனை செய்ததில், 13 பேருக்கு சிகா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.