"கைது செய்து அழைத்து செல்லட்டும்" - பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் பேட்டி
போலீசார் சம்மன் அளித்த நிலையில், தன்னை கைது செய்யலாம் என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.;
போலீசார் சம்மன் அளித்த நிலையில், தன்னை கைது செய்யலாம் என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவினர் மூன்றரை கோடி ரூபாய் அளவிலான கருப்பு பணத்தை கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்ததாக புகார் எழுந்தது. மேலும் 25 லட்சம் ரூபாய் பணத்தை பாஜக.,வுக்காக ஒருவர் எடுத்துச் சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டை பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், கடுமையாக மறுத்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கில், ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் கேரள போலீசார் சம்மன் அளித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுரேந்திரன், விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் எனவும் தன்னை கைது செய்து அழைத்து செல்லட்டும் எனவும் தெரிவித்துளளார்.