நாளை முதல் கல்லூரிகள் திறப்பு - இளநிலை, முதுநிலை இறுதியாண்டு வகுப்புகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் நாளை முதல் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.;

Update: 2020-12-16 10:15 GMT
புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஒன்பது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, மருத்துவக் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த நவம்பரில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், நாளை முதல் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான, கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் நடைபெற உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. வாரத்திற்கு ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், சுழற்சி முறையில் 50 சதவீதம் மாணவர்களை வைத்து பாடம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கல்லூரிகளில் வகுப்பறைகளை சுத்தப்படுத்தி, தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்