கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெங்கையா நாயுடு கூறும் 4 வழிமுறைகள்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு முக்கிய விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.;
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு முக்கிய விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, முக கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ளார். வீட்டிற்கு வெளியே ஒருவரை சந்திக்கும் போதும், வீட்டில் பணிபுரியும் வெளியாட்கள் உட்பட முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மிக முக்கியமாக, சமூக இடைவெளி கடைப்பிடிப்பதோடு, சுகாதாரத்தை பராமரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மற்றும் ஓரளவு உடற்பயிற்சி அவசியம் என்றும் கூறியுள்ளார்.