மேகதாது விவகாரம் : மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த முடிவு - கர்நாடக அமைச்சர்
மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.;
மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார். தற்போது வரை மேகதாது திட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் எந்த தடையும் இல்லை என்றும், நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள மனுவை எதிர்கொள்ள சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவதாகவும் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.