தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு - தேசிய அளவில் இந்தூர் நகரம் முதலிடம்

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில், இந்தூர் முதலிடத்தை பிடித்துள்ளது.;

Update: 2020-08-20 10:50 GMT
தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று டெல்லியில் வெளியிட்டார்.10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய நகரங்களில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017 முதல் நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் முதலிடத்தை இந்தூர் பிடித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்திலுள்ள கோவை 40-வது இடத்தையும், மதுரை 42- வது இடத்தையும், சென்னை 45-வது இடத்தையும் பிடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்