மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி அளிக்கும் விவகாரம் : வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி அளிக்க பிசிசிஐக்கு உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.;
பிசிசிஐ-ன் புதிய விதிமுறைகளை கடைபிடிக்காததால் ,
தமிழக கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட சில மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அளிக்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய விதிகளை அமல்படுத்திவிட்டதால் , மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான நிதியை அளிக்க பிசிசிஐக்கு உத்தரவிடக்கோரி தமிழக கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ.போப்டே பிசிசிஐ தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.