தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் - மேலும் ஒருவரை காவலில் எடுத்து விசாரணை
தங்க கடத்தல் விவகாரத்தில் மேலும் ஒருவரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக சுங்கத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மலப்புரத்தை சேர்ந்த ஹம்சத் என்பவரை காவலில் எடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துபாயில் இருந்து கடத்தல் தங்கத்தை அனுப்புவதற்கு பைசல் பரீத்துக்கு உதவிய ராபின்ஸ் என்பவரை இந்தியாவிற்கு வரவழைக்கும் நோக்கில் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைசல் பரீத்திடம் துபாய் போலீசார் விசாரித்து வரும் நிலையில் விரைவில் அவர் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார் என்று கூறப்படுகிறது.