பெங்களூருவில் மீண்டும் முழு ஊரடங்கு கிடையாது - முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பெங்களூரில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
பெங்களூரில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், வெளிமாநிலத்தில் இருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்தார். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், வீட்டு தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெங்களூர் நகரில் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்படுமோ என கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.