இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ரத்து - புதுச்சேரி பல்கலைக்கழகம்
புதுச்சேரியில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.;
புதுச்சேரியில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுச்சேரியில் கல்லூரிக்கான தேர்வு ஜூலை மாதம் நடத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தேர்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங்கிடம், முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.