லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் வீரமரணம் - பிரதமர் மோடி, முதலமைச்சர் இரங்கல்
லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.;
ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று இருந்தார். அப்போது லடாக் பகுதியில் வீர மரணமடைந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்து கொண்டார். இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சீன ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். வீரமரணம் எய்திய பழனி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.