ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் - வீரர் பழனியின் சொந்த கிராமமான கடுக்கலூர் கிராம மக்கள் சோகம்
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம் அடைந்துள்ளார்;
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம் அடைந்துள்ளார். திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் 40 வயதான பழனி, ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.லடாக் எல்லையில் பணியாற்றி வந்த அவர், சீன ராணுவத்தினர் தாக்குதலில் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பழனி வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து,
கடுக்கலூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
கடுக்கலூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.