"ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-06-15 17:35 GMT
டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்துக்கட்சி தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள பதிவில், முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்