முயலை வேட்டையாடி டிக் டாக் வீடியோ வெளியீடு - இளைஞர்கள் 2 பேரை கைது செய்த போலீசார்

முயலை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-05-22 11:33 GMT
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர்  மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் அங்குள்ள வனப்பகுதி ஒன்றுக்கு சென்று முயல்களை வேட்டையாடி உள்ளனர். முயலை வேட்டையாடியதை புலிக்கு இணையாக ஒப்பிட்டு அவர்கள் டிக் டாக்கில் வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில், சர்ஜாபுரா கிராமத்தை சேர்ந்த பவன் நாயக் மற்றும் சுவாமி நாயக் ஆகிய 2 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்