கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு நகைக் கடைகள் திறப்பு

கேரளாவில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற பகுதியில் உள்ள நகைகடைகள் நேற்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.;

Update: 2020-05-21 10:41 GMT
கேரளாவில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற பகுதியில் உள்ள  நகைகடைகள் நேற்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து,  நகைகடை உரிமையாளர்கள், கடைகளை திறந்து கிருமி நாசினி அடித்து, முக கவசம் அணிந்த படி விற்பனையை துவக்கினர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சமூக விலகலுடன் கூடிய நாற்காலி போடப்பட்டிருந்தது. பணம் செலுத்தும் இடத்தில் இடைவெளி விட்டு நிற்க தரையில்  ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்தது. நகைகடைக்கு வருவதற்கு முன்பே பல வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு வந்து, நகைகளை வாங்கி சென்றனர். கடந்த இரு மாதங்களில் தங்க நகை விலை அதிகரித்த போதிலும் வாடிக்கையாளர் வருகை குறையவில்லை என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்