ஜிப்மர் ஆன்லைன் நுழைவுத்தேர்வு : 200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.;

Update: 2019-06-02 06:19 GMT
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. புதுச்சேரி ஜிப்மரில் 150 இடங்கள், காரைக்கால் ஜிப்மரில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதிலும் இருந்து, 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 பேர் இந்த தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வருகிற 21ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும், ஜூலை 1ஆம் தேதி முதல், வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்