கருணாநிதி பெயரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க முடிவு
பதிவு: செப்டம்பர் 11, 2018, 09:00 AM
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலை மற்றும் காரைக்காலில் உள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைக்கவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.