நடுவானில் எரிபொருள் நிரப்பிய தேஜாஸ் விமானம்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 01:44 AM
இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ், இலகு ரக போர் விமானத்துக்கு, நடுவானில் எரிபொருளை நிரப்பி சாதனை நடத்தப்பட்டது. பெங்களூருக்கு மேலே, வானில் 20 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. காற்று மண்டலத்துக்கு மேல் நடந்த இந்த நிகழ்வின்போது, மற்றொரு போர் விமானத்தில் இருந்து 1900 கிலோ எரிபொருளை தேஜாஸ் விமானத்துக்கு விமானப்படை வீரர்கள் மாற்றினர்.