மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆயத்தம்

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளை கர்நாடக மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.

Update: 2018-09-05 01:09 GMT
5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் மேகதாது அணையை கட்ட கர்நாடகா முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்த சூழலில் அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய  நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதேநேரத்தில் புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்குமாறும் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு மத்திய நீர் வள ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. 

எனவே இரண்டொரு வாரங்களுக்குள் மேகதாது அணை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்