எப்படி பரவுகிறது எலிக்காய்ச்சல்? ...

கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய சில தகவல்கள்.

Update: 2018-09-03 12:52 GMT
கேரள மாநில மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு எழுவதற்குள் அடுத்த கட்ட அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது எலிக்காய்ச்சல். எலிக்காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளால் அந்த மாநில மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். எலிக்காய்ச்சல் என்பது எலியின் சிறுநீரில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்களால் பரவக் கூடியது. பொதுவாக வீடுகளைச் சுற்றி வசிக்கும் எலிகள் வெளியிடும் கழிவுகள் தண்ணீருடன் கலந்து விடுகிறது. இந்த தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது நமக்கு தெரியாமலே அது நம்மில் கலந்து விடுவதுண்டு. இதுதான் இந்த நோய் பரவுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. 

எலிக்காய்ச்சல் தொற்று என்பது எல்லாரையும் தாக்கக் கூடியது அல்ல. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் நோய் தாக்கம் உள்ளவர்களை இது எளிதாக தாக்கும். இதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படுகிறது. மற்ற நாட்களை விட மழைக்காலங்களில் தான் எலிக்காய்ச்சலின் பாதிப்புகள் அதிகம் இருக்கும். காரணம் மறைவிடங்களில் வாழும் எலிகள் வெளியிடும் கழிவுகள் தண்ணீருடன் கலந்து விடுவது மழைக்காலத்தில் தான். 

எனவே எலிக்காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டியது அவசியம். மேலும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது கை, கால்களை நன்றாக கழுவினால் போதும். பொதுவாக மழைக்காலங்களின் போது ஏரி, குளம் போன்ற பொது இடங்களில் குளிக்காமல் இருப்பதும் நல்லது. சுய மருத்துவ முறைகளை விட்டுவிட்டு நோய்க்கான அறிகுறி தெரிய தொடங்கிய உடனே உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதும் இங்கு அவசியமான ஒன்று.
Tags:    

மேலும் செய்திகள்