சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதில்லை - திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் அறிவிப்பு

ஆன்லைன் தரிசன பதிவு முறை நீக்கம் மற்றும் வழக்கமான முறையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Update: 2018-09-03 05:02 GMT
செய்தியாளர்களிடம் பேசிய திருவாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பத்மகுமார், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சபரிமலையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உண்டாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

ஆன்லைன் தரிசன பதிவு முறை குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், அந்த முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான முறையிலேயே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பத்மகுமார் தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பம்பை - திருவேணி பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், வெள்ள பாதிப்புகளை காரணம் காட்டி, பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதை தடுக்க, காவல்துறையினர் சிலர் திட்டமிடுவதாக, சபரிமலை அய்யப்பன் சேவ சமஜம் என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்