பாராசூட் பயணத்தின் மூலம் கேரளாவுக்கு நிதி
பதிவு: ஆகஸ்ட் 24, 2018, 11:26 AM
பாராசூட் பயணத்தின் மூலம் கேரளா வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணி கடலூரில் நடைபெற்று வருகிறது. கடலூர் வெள்ளி கடற்கரையில் 'வான்வழி சாகசம்' என்ற முறையில் பாராசூட் பயணத்திற்கு கோவையை சேர்ந்த வான் விளையாட்டு அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பயணம் செய்ய ஒருவருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. செப்டம்பர் இரண்டாம் தேதி வரை நடைபெறும் இந்த சாகச விளையாட்டு மூலம் பெறப்படும் தொகை, கேரளா வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.