"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி
பதிவு: ஆகஸ்ட் 23, 2018, 10:36 AM
தமிழகத்தில் பாஜக தனித்து நின்றால்தான் ஓட்டுகள் கிடைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று கூறினார். இது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.